உறவுகளுக்காக எம் ஊர் செய்திகள்

திங்கள், 8 மார்ச், 2010

புங்குடுதீவில் பெருக்கு மரம்




புங்குடுதீவில் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த பெருக்குமரம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதைவிட வெளிச்சவீடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நெடுந்தீவுத நயினாதீவு ஆகிய இடங் களிலுள்ள மக்கள் தமது பயணத்தை மேற் கொள்ளும் பிரதான பாதையில் புங்குடுதீவு அமைந்துள்ளது.இங்குள்ள பிரதான வீதியில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. தற் போதைய நிலையில் புங்குடுதீவு ஒரு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறிவருகிறது. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படாத நிலை காணப்படுகிறது
நயினாதீவுக்குச் செல்லும் தென்னி லங்கை மக்கள் தங்குவதற்கு வசதியாக குறி காட்டுவான் பிரதேசம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. ஏனைய பிரதே சங்கள் எந்தவித அபிவிருத்திப் பணிகளும் செய்து முடிக்கப்படாமல் காணப்படுகின்றன. குறிப்பாக பிரதான வீதிகள் ஓரளவு சீரான நிலையில் உள்ளபோதிலும் உட்பகுதிகளில் உள்ள ஏனைய வீதிகள் பழைமை வாய்ந்த வையாக- நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றன.
இவற்றை புனரமைப்பதற்கு நிதி ஒதுக் கீடுத புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என பல கதைகள் வெளிப்படுகின்ற போதும் அதனை நடைமுறைப்படுத்த எவரும் முன் வருவதில்லை. இவ்வாறான நிலையில் புங்குடுதீவில் இரு புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.பெருக்குமரம்இங்கு மிகப் பெரிய பெருக்குமரம் ஒன்று இறுப்பிட்டிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இறுப்பிட்டி சித்திவிநாயகர் வித்தியால யத்துக்கு முன்பாகவுள்ள ஒழுங்கைக்குள் இம் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்த போதுத அவர்கள் கொண்டு வந்த குதிரை களுக்கு உணவு போடுவதற்காக இந்த பெருக்குமரம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப் படுகின்றது. இவை கிட்டத்தட்ட 400 வருடங் கள் பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெருக்குமரத்தின் இலைகளை உள் ளூரிலுள்ள விலங்குகள் உண்பதில்லை என்பதால் இம் மரம் மிகப் பெரிதாக வளர்ந் துள்ளதாகக் கூறப்பட்டது.
இவை இலங்கையில் மன்னார்த நெடுந்தீவு ஆகிய இடங்களிலேயே காணப்படுவ தாக முதலில் கூறப்பட்டது. தற்போது அது புங்குடுதீவுப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.பழமைவாய்ந்த வெளிச்சவீடு இதைவிட புங்குடுதீவின் புராதன சின்ன மான வெளிச்ச வீடும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இவ் வெளிச்சவீட்டைச் சூழவுள்ள பகுதி யில் கடற்படையினரின் முகாம் நீண்ட கால மாகக் காணப்பட்டதால் அப் பகுதிக்கு மக்கள் செல்வதில்லை. ஆனால் தற்போது அப் பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறியுள்ள நிலை யில் வெளிச்சவீட்டின் புனரமைப்புப் பணி கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள் ளது. இது புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தி லுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.வெளிச்சவீட்டுக்கு அண்மையாகவுள்ள கிணற்றுக்குள் பழைமைவாய்ந்த காஸ் சிலிண்டர் ஒன்றும் காணப்படுகின்றது.பெருக்குமரம் மற்றும் வெளிச்சவீட்டுப் பகுதிகளை வேலணைப் பிரதேச செயலக நந்தகோபாலன் தலைமையிலான குழு வினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ள துடன் அவற்றை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு ஏற்றவகையில் அமைப் பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. இவற்றின் புனரமைப்பு மற்றும் புங்குடு தீவின் அபிவிருத்தி என்பன அப்பகுதி மக்க ளின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கும் என்பதால் உரிய தரப்பினர் புங்குடுதீவுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

1 கருத்துகள்:

Blogger தீவகன் கூறியது…

நல்ல வி­யம் நண்பரே

8 மார்ச், 2010 அன்று 6:18 AM

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு