இணைய முகவரி மாற்றம்
அன்பு வாசகர்களே!
www.pungay.tk என்ற முகவரிக்குப் பதிலாக இனி www.pungudutheevu.tk என்ற முகவரியில் பாருங்கள்.சிரமத்துக்கு மன்னிக்கவும்.
அன்புடன்
ஆசிரியர்
உறவுகளுக்காக எம் ஊர் செய்திகள்
அன்பு வாசகர்களே!
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி 13.03.2010அன்று வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.



நெடுந்தீவுத நயினாதீவு ஆகிய இடங் களிலுள்ள மக்கள் தமது பயணத்தை மேற் கொள்ளும் பிரதான பாதையில் புங்குடுதீவு அமைந்துள்ளது.இங்குள்ள பிரதான வீதியில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. தற் போதைய நிலையில் புங்குடுதீவு ஒரு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறிவருகிறது. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படாத நிலை காணப்படுகிறது

புங்குடுதீவு குறிகாட்டுவான் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந் திரசிறியினால் மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆளுநரினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிதியினைப் பயன்படுத்தி குறிகாட்டுவான் பகுதியில் மலசல கூடங்கள், வாகனத்தரிப்பிடம் மற்றும் பயணிகள் தங்குவதற்கான இடம் என்பன கட்டப்பட்டுவருகின்றன.
யாழ். புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் நூற் றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை காலைத மாலை இரு நிகழ்வுகளாக நடை பெறவுள்ளது.